சென்னை: பிரபல நடிகர் ஜாக்கி சான் குறித்து வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரவி வருகிறது. இருப்பினும் அவர் நலமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான், ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் சான்தான். 61 வயதாகும் ஜாக்கி சான் குறித்து சில முறை வதந்திகள் வந்துள்ளன. அந்த வகையில் இன்றும் ஒரு வதந்தி வாட்ஸ் ஆப் மூலமாக பரவி வருகிறது.
ஆனால் ஜாக்கி சான் நலமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஜாக்கி சான் குறித்த வதந்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இணையதளங்களை முற்றுகையிட்டு செய்தி உண்மையா என்று தேடிப் பார்த்தனர்.
ஆரபத்தில் ஸ்டண்ட் மேனாக இருந்த ஜாக்கி சான், ப்ரூஸ் லீயுடன் 2 படங்களில் நடித்துள்ளார். பின்னர் ப்ரூஸ் லீயின் மறைவுக்குப் பின்னர் இவர் தனி நாயகாக மாறினார். காமெடியையையும், ஆக்ஷனையும் கலந்து கொடுத்து கலக்கிய ஜாக்கிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
முன்பு போல ஆக்ஷனில் நடிக்காமல் வித்தியாசமான கேரக்டர்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜாக்கி என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment