சென்னை: ஜெயம் ரவி ஹன்சிகா நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படத்திற்கு யு சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இது படப்பிடிப்புக் குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
காதல் காட்சிகளும் கிளுகிளுப்பு காட்சிகளும் அதிக அளவில் உள்ள இப்படத்திற்கு ஒரு கட்டும் கொடுக்காமல் தணிக்கை குழுவினர், அனைவரும் கண்டு களிக்கும் வகையில் யு சான்றிதழ் வழங்கி உள்ளனர் .
நிமிர்ந்து நில் படத்திற்குப் பின் ரவி நடித்த எந்த படங்களும் திரைக்கு வராத நிலையில் இப்படத்தை விரைவில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன .
ரவி அறிமுகமான முதல் படமே ஜெயமாக அமைந்தது எனவே ஜெயம் என்பது அவரின் அடைமொழியாக கூடவே ஒட்டிக் கொண்டது. அண்ணன் ராஜா இவரை வைத்து எடுத்த படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது என்று ஒரு பேச்சுஎழுந்த பொது பிற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்து அந்த முயற்சியில் தோல்வி கண்ட இவர்பேராண்மை,நிமிர்ந்து நில் போன்ற வித்தியாசமான படங்களிலும் நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள படாத பாடு பட்டு வருகிறார்.
எங்கேயும் காதல் படத்திற்குப் பின் ஹன்சிகாவுடன் இவர் இணையும் இரண்டாவது படம் ரோமியோ ஜூலியட் ,இரண்டுமே காதல் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுகமான புதிதில் ரவியுடன் இணைந்து நடித்த ஹன்சிகா நீண்ட வருடங்கள் கழித்து முன்னனி நடிகையாக விளங்கும் இப்போது இந்த படத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அறிமுக இயக்குனர் லஷ்மன் இயக்கியிருக்கும் இப்படம் ஏற்கனவே பாடல்களால் பிரச்சினைக்கு உள்ளானது. அதனால் நொந்து போயிருந்த இவர் தற்போது கிடைத்திருக்கும் சான்றிதழ் குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார். டி. இமான் இசையில் வெளிவர இருக்கும் இப்படத்தில் அனிருத் ஒரு பாடலைப் பாடி உள்ளார்.
Post a Comment