காஷ்மீர்: காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் கிடைத்த 5 ஆண்டுகள் சிறை தண்டனை சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து பாலிவுட் நடிகர் சல்மான் கான் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் நடிக்க காஷ்மீர் சென்றுவிட்டார்.
இந்தி நடிகர் சல்மான் கான் 2002ம் ஆண்டில் மும்பை பந்த்ரா பகுதியில் குடிபோதையில் காரை ஓட்டி ஒருவரை கொன்ற வழக்கு 13 ஆண்டுகளாக மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பையொட்டி காஷ்மீரில் பஜ்ரங்கி பாய்ஜான் படப்பிடிப்பில் இருந்த சல்மான் மும்பை வந்தார்.
மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த 5 ஆண்டு தண்டனையை உயர் நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்தது. இதையடுத்து சல்மான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள காஷ்மீர் சென்றுவிட்டார்.
கபீர் கான் இயக்கி வரும் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் சல்மானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது.
சல்மான் காஷ்மீரில் 5 நாட்கள் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். கபீர் கானும், சல்மான் கானும் ஏக் தா டைகர் வெற்றிப் படத்தை அடுத்து மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட பிறகு சல்மான் சோனம் கபூருடன் பிரேம் ரத்தன் தான் பாயோ படத்தில் நடிக்க உள்ளார்.
Post a Comment