இதோ இன்னும் ஒரு பேய்ப் படம்.. பார்த்துப் பயந்து போங்க!

|

சென்னை: சாட்டை, கீரிப் புள்ள படங்களில் நடித்த யுவன், மற்றும் பசங்க கோலிசோடா படங்களில் நடித்த ஸ்ரீராம் இருவரும் நடித்து வெளிவந்திருக்கும் கமர் கட்டு ஒரு பேய்படம்.

பேய் வேற யாருமில்ல இந்த ரெண்டு பேரும்தான்.

இயக்குனர் ராம்.ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கற இந்தப் படம் ரொம்ப நாளா இதோ அதோன்னு சொல்லி ஒரு வழியா ரிலீஸ் ஆகிடுச்சி.

Kamarkattu movie review

சேத்தன் அங்காடித்தெரு சிந்து, தளபதி தினேஷ், பக்கோடா பாண்டி இவங்களோட சேர்ந்து நாயகியா நடிச்சிருக்காங்க ரஷ்ரா ராஜ், மனிஷா ஜித்.

யுவனும்,ஸ்ரீராமும் நல்லாப் படிக்கிற பசங்க அதாவது மாநிலத்திலேயே மொதல் மார்க் வாங்கற அளவுக்கு. தங்களோட காதலிங்க ரஷ்ரா, மனிஷா நிறைய மார்க் வாங்கணும் அப்படின்னு இவங்க ரெண்டு பெரும் ரெண்டு எக்ஸாம எழுதாம தியாகம் பண்றாங்க..

இவங்க காதலிங்க ரெண்டு பேரும் காலேஜ் போனவுடனே காதலன மாத்திடறாங்க..காரணம் அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றது பணக்கார பசங்கள.. இது எப்படி இருக்கு

தங்களோட காதலிங்க மாறினத தாங்க முடியாத ரெண்டு பேரும் அவங்க அம்மாகிட்ட போய் சொல்ல அவங்க அம்மா பொண்ணுங்களோட லவர்ஸ்கிட்ட சொல்லி ரெண்டு பேரையும் போட்டு தள்ளிடறாங்க.

செத்துப் போன ரெண்டு பேரும் சிவனோட மகிமையால ஆவிங்களா மாறி தங்களைத் தீர்த்துக் கட்டுனவனங்கள விட்டுட்டு மத்தவங்கள எல்லாம் பழி வாங்குறாங்க..என்ன லாஜிக் இது.

நெறைய இடத்துல எடிட் பண்ணவங்க கத்திரி போட மறந்துட்டாங்க போல..முடியல. படத்த எடுத்த இயக்குனர் நல்லா தான் யோசிச்சு எடுத்திருக்காரு ஆனா படம் பாக்க முடியல பாஸ்!

சார் ப்ளீஸ் கொஞ்சம் கேட்ட திறந்து விட்டா நாங்க அப்படியே சொல்லாமக் கொள்ளாம ஓடிப் போயிருவோம்....இது தியேட்டருக்கு தெரியாமல் வந்து விட்ட ரசிகர்களின் ஓபன் வாய்ஸ்!

 

Post a Comment