மும்பையின் 'லேடி ரஜினி' சோனாக்ஷி: சொல்கிறார் ஏ.ஆர். முருகதாஸ்

|

மும்பை: இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை மும்பையின் லேடி ரஜினி என்று அழைத்துள்ளார்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை வைத்து அகிரா என்ற இந்தி படத்தை எடுத்து வருகிறார். 2011ம் ஆண்டு வெளியான மௌனகுரு படத்தின் இந்தி ரீமேக் தான் அகிரா. இதில் சோனாக்ஷியுடன் கொங்கனா சென் சர்மாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்புக்கு இடையே சோனாக்ஷி டப்ஷ்மாஷ் வீடியோ எடுத்துள்ளார். அதில் அவர் ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான் என்ற ரஜினி பட வசனத்திற்கு வாய் அசைத்துள்ளார்.

இந்த டப்ஷ்மாஷ் வீடியோவை முருகதாஸ் ட்விட்டரில் வெளியிட்டு அதற்கு மும்பையின் லேடி ரஜினி என்று தலைப்பு கொடுத்துள்ளார். முருகதாஸின் ட்வீட்டை தனது ட்விட்டர் கணக்கில் போட்டு ஹாஹாஹாஹா என்று தெரிவித்துள்ளார் சோனாக்ஷி.

நான் சூப்பர்ஸ்டார் ஹீரோயின் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுபவர் சோனாக்ஷி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment