நடிகர் சங்கத்துடன் மீண்டும் மோதும் விஷால்... தலைவர் பதவிக்கு குறி?

|

புதுக்கோட்டை: நடிகர் சங்க கட்டடம் சொந்தமாக கட்டப்படாவிட்டால், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர, வேறு வழியில்லை என, நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர் சங்க உறுப்பினர்களை, நடிகர் விஷால் மற்றும் கருணாஸ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

Actor Vishal raise his Voice against South india Film actors association

பின்னர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது....

சென்னையில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடம் ஒரு திரைப்பட நிறுவனத்துக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்திற்கு சொந்த கட்டடம் கட்டடப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றால், நடிகர் சங்க தலைவர் பதவிக்கு தங்கள் தரப்பில் இருந்து போட்டியிட நேரிடும்.

இவ்வாறு நடிகர் விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தயாராகும் இளம் நடிகர் பட்டாளம்

பட வாய்ப்பே இல்லாத ஓய்வுபெற்ற நடிகர்கள், சினிமாவிலேயே நடிக்காதவர்கள், சங்கத்தில் அமர்ந்து கொண்டு எந்த பிரச்சினையாக இருந்தாலும் இளம் நடிகர்களை அழைத்து மிரட்டும் பாணியில் விசாரிப்பது இளம் நடிகர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால் இளம் நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து நடிகர் சங்கத்துக்கு எதிராக ஒரு இளம் தலைமையை உருவாக்க தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த வேலையை முன்னால் நின்று செய்வது விஷால் என்கிறார்கள் திரைப்படத்துறையில். அதனால் அவரையே வரும் நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நிறுத்துவது என்று முடிவு செய்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஒரு செய்தியாக சரத்குமார் வகிக்கும் நடிகர்சங்கத் தலைவர் பதவிக்கு இளைஞர் பட்டாளம் சார்பில் நடிகர் சிவக்குமாரை நிறுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது.

பொதுச் செயளலாளர் பதவியில் நீடிக்கவே ராதாரவியும் விரும்புகிறார்.

 

Post a Comment