த்ரிஷாவின் திருமணம் நின்று போனதற்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என்று ஒரு
தகவல் இன்று இணையதளங்களில் உலா வர ஆரம்பித்துள்ளது.
த்ரிஷா - வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடந்தது.
ஆனால் திருமணத் தேதி அறிவிக்காமல் வைத்திருந்தனர். ஆனால் தொடர்ச்சியாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வந்தார். புதிதாக கமல், சிம்பு படங்களிலும் நாயகியாக ஒப்பந்தமானார்.
அதே நேரம் வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் முதலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி, பின்னர் விலகினார்.
ஒரு கட்டத்தில் த்ரிஷா - வருண் மணியன் திருமணமே ரத்தாகிறது என செய்தி வெளியானது. பின்னர் அதுவே அதிகாரப்பூர்வமானது. த்ரிஷாவின் அம்மாவும், பிடிக்காத கல்யாணத்தை எதற்கு செய்ய வேண்டும் என்று கூறி, திருமணப் பேச்சுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார்.
இப்போது, த்ரிஷாவின் திருமணம் நின்றதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பேச ஆரம்பித்துள்ளனர்.
அதில் ஒரு திடுக்கிடும் புதிய தகவலாக, தனுஷால்தான் இந்தத் திருமணம் நின்றதாக சிலர் பரபரப்பு கிளப்பி உள்ளனர்.
திருமண நிச்சயதார்த்தத்துக்கு தனுஷ் வந்ததால், வருண் மணியன் கோபமடைந்ததாகவும், அதைக் கண்டு கொள்ளாத த்ரிஷா, தனுஷுடன் நட்பு பாராட்டியது பிடிக்காமல் சண்டை போட்டதாகவும் சொல்கிறார்கள்.
இந்த முதல் ஊடலே, தொடர்ந்து இருவருக்குள்ளும் பல்வேறு விஷயங்களில் கருத்து மோதலை ஏற்படுத்தி, கடைசியில் நிரந்தர பிரிவுக்கு வழி வகுத்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
இத்தனைக்கும் தனுஷும் த்ரிஷாவும் எந்தப் படத்திலும் சேர்ந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லா கிளப்பிவிடறாங்கப்பா!
Post a Comment