சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் கான் படத்தில் போலீஸ் அதிகாரியாக டாப்ஸி நடிக்கிறார்.
தனுஷின் நண்பேன்டாவான சிம்புவை வைத்து செல்வராகவன் இயக்கி வரும் படம் கான். கான் என்றால் காடு என்று அர்த்தம். இந்த படத்தின் பட்பிடிப்பு துவங்கி முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டார்கள்.
சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். கான் படத்தில் சிம்பு முருக பக்தராக வருகிறார். டாப்ஸியோ முதல் முதலாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். காஞ்சனா 2 படத்தில் பேயாக வந்த டாப்ஸி தற்போது போலீஸ் அதிகாரியாக ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
கான் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை காட்டுப்பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். டாப்ஸி திரு இயக்கத்தில் ஜெய் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் தமிழ்ச்செல்வி என்ற குடும்பத்து பெண்ணாக வருகிறாராம்.
கான் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வருகிறது. அண்ணன் இயக்கத்தில் நண்பன் நடிக்கும் படத்தில் தனுஷ் கௌரவத் தோற்றத்தில் வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Post a Comment