மாஸா இல்லை, மாசிலாமணியா...?

|

சென்னை: சூர்யா நடித்து வெளிவர இருக்கும் மாஸ் திரைப்படத்தின் பெயர் மாற்றப்படவுள்ளதாம்.

மாஸ் என்ற பெயரில் படம் வந்தால் வரி விலக்கு சலுகை கிடைக்காது என்பதால் மாஸ் என்கின்ற மாசிலாமணி என்று தற்போது பெயர் மாற்றி இருக்கிறார்களாம் படக்குழுவினர்.

Surya movie “mass’ title changed suddenly

எதனால் இந்த மாற்றம் என்று விசாரித்தால் படத்திற்கு தற்போது யூ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. வன்முறைக் காட்சிகள் அதிகம் நிறைந்த இந்தப் படத்திற்கு யூ சர்டிபிகேட் கிடைக்காது என்று நினைத்திருந்த நிலையில் சென்சார் போர்டு அனைவரும் இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம் என்று யூ சர்டிபிகேட் கொடுத்துவிட்டது.

அடுத்து என்ன பண்ணலாம் என்று ரூம் போட்டு யோசித்த படக்குழு தமிழில் பெயர் வைத்தால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்குமே என்ற நல்ல எண்ணத்தில் மாஸ் படத்தின் பெயரை மாஸ் என்கிற மாசிலாமணி என்று வைத்துவிட்டது. வரிவிலக்கிற்கு ஆசைப் பட்டு பெயர் மாற்றியிருக்கிறார்கள் வேறு ஒன்றுமில்லை.

ஏற்கனவே மாசி என்று ஒரு படம் வந்தது. தேவயானி தம்பி நகுல் ஹீரோவாக நடித்த படம் அது. அதில் மாசிலாமணி என்பதுதான் ஹீரோவின் பெயர். அதைச் சுருக்க மாசி ஆக்கினார்கள். சூர்யா படப் பெயரை மாஸ் ஆக்கி இப்போது மாசிலாமணி என்று நீட்டி விட்டனர்.

 

Post a Comment