இயக்குநர் மணிரத்னத்திற்கு நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி

|

டெல்லி: பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் (59), நெஞ்சுவலி காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை தனது குழுவினருடன் மணிரத்னம் கொண்டாடி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Mani Ratnam hospitalised

இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில்,மணிரத்னத்திற்கு லேசான நெஞ்சுலி ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும், ஓய்வில் இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் தகவல்கள் தெரிவிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.

"ராவணன்' படத்தின் படப்பின் போது மணிரத்னத்துக்கு லேசான நெஞ்சுவலி எற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மீண்டும் மணிரத்தினத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இது நான்காவது முறையாகும்.

 

Post a Comment