சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவனை ரகசியத் திருமணம் செய்து கொண்டார் நடிகை நயன்தாரா என்று கோலிவுட்டில் பரபரப்பான பேச்சு ஒன்று அடிபடுகிறது.
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையான நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரித்து வருகிறார்.
படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி காதலில் விழுந்தனர் என்று நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.
விக்னேஷும் மலையாளி என்பதால் காதல் மேலும் உறுதியாகி தனது வீட்டினருக்கு காதலனை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் நயன்.
இந்நிலையில் ஏற்கனவே பிரபு தேவா, சிம்பு ஆகியோருடனான காதல் கல்யாணம் வரை வந்து நின்று போனது அனைவரும் அறிந்ததே. ஆனால் விக்னேசை நயன்தாரா மிக ஆழமாக காதலித்து வருகிறார், எனவே இது கண்டிப்பாக திருமணத்தில் முடியும் என்று பலரும் உறுதிபடக் கூறிய நிலையில் தற்போது இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு விட்டதாக புதிய பேச்சு எழுந்துள்ளது.
கடந்த வாரம் பெற்றோர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நயன்தாராவுக்கு நிறைய படங்கள் தற்போது புக்காவதால் திருமணத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனராம்.
எது எப்படியோ "ராஜா, ராணி"யை, சந்தோசமா வச்சுக்கிட்டா சரிதான்..!
Post a Comment