"ஹாட்ரிக்" அடிப்பாரா விஜய் ஆண்டனி?

|

சென்னை: இசை அமைப்பாளராக அறிமுகமாகி நடிப்பிலும் கலக்கி கொண்டிருக்கும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த இந்தியா பாகிஸ்தான் படம் இன்று வெளியாகிறது. என்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக சுஷ்மா ராஜ் மற்றும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிகர் பசுபதி நடித்துள்ளார்.

ஜெகன், மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர், டி.பி.கஜேந்திரன் மற்றும் ஊர்வசி என்று காமெடிக்காக ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் விஜய் ஆண்டனி அல்ல.. மாறாக தீனா தேவராஜன்.

Will Vijay Antony Give A Hat-Trick?

தொடர்ந்து 2 வெற்றிப் படங்களை (நான், சலீம்) கொடுத்த விஜய் ஆண்டனிக்கு இன்று வெளியாகும் இந்தியா பாகிஸ்தான் படமும் வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியாகக் கொண்டாடி மகிழலாம் .

நான், சலீம் ஆகிய இரு படங்களுமே த்ரில்லர் வகையைச் சேர்ந்தவை இதற்கு முற்றிலும் நேர்மாறாக இந்தியா பாகிஸ்தான் படமானது முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்கப் பட்டுள்ளது.

காமெடி கரை சேர்க்குமா? விஜய் ஆண்டனியை பொறுத்திருந்து பார்க்கலாம்?

 

Post a Comment