எடிசன்(யு.எஸ்): நான், சலீம் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகும் இந்தியா பாகிஸ்தான் திரைப்படம் அமெரிக்காவிலும் இன்று வெளியாகிறது.
நியூ ஜெர்ஸி எடிசன் நகரின் பிக் சினிமாஸ், சியாட்டல் ராக்சி சினிமாஸ், ராஸ்வெல் (அட்லாண்டா மாநகரம்) நவ்ரங் சினிமாஸ், சான் ஓசே (கலிஃபோர்னியா) டவுண் சினிமாஸ், நைல்ஸ் (சிகாகோ) மூவி மேக்ஸ் சினிமாஸ் ஆகிய ஐந்து திரையரங்குகளில் இந்தியா - பாகிஸ்தான் படம் வெளியாகிறது.
கமல்ஹாசனின் உத்தம வில்லன் முக்கிய நகரங்களில் ஓடிக் கொண்டிருப்பதால் கூடுதல் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வினியோகிஸ்தர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் டல்லாஸ் உள்ளிட்ட ஏனைய முக்கிய நகரங்களில் வெளியிட முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நான், சலீம் படங்களின் தொடர் வெற்றியால் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவரும் மூன்றாவது படமான இந்தியா பாகிஸ்தானுக்கு அமெரிக்காவிலும் ஓரளவு எதிர்ப்பார்ப்பு உள்ளது.
Post a Comment