அவக எல்லாம் அங்க வராம போனது ஏன் தெரியுமா?

|

அந்த நட்சத்திர டிவி நிறுவனம், நடத்திய அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு திரையுலக பிரபலங்கள் சொற்ப அளவிலேயே பங்கேற்றனர். காரணம் எல்லாம் பாலிடிக்ஸ்தான் என்று காதை கடிக்கிறது கோலிவுட் பட்சி ஒன்று. தொலைக்காட்சி உரிமைக்காக அதிக படங்களை வாங்காத அந்த டி.வி சேனல், திரையுலகத்தை நம்பி நடத்தும் இந்த நிகழ்ச்சியால் கோடி கோடியாக லாபம். படம் வாங்காதவர்களுக்கு இப்படியொரு மரியாதையா? பொசுக்கென்று செக் வைத்துவிட்டதாம் தயாரிப்பாளர் சங்கம்.

படம் வாங்கினால்தான் நிகழ்ச்சிக்கு திரையுலகம் வரும் என்று கூறிவிட, இது தொடர்பான மீட்டிங்குக்கு வந்த அந்த டிவி சேனலின் சிஇஓ, இதுவே ஆளுங்கட்சி சேனல்னா இப்படி சொல்வீங்களா? என்றாராம். இதனால் ஆளுங்கட்சி கடுப்பாக அது அப்படியே காற்று வாக்கில் வெளியே கசிய, முக்கால்வாசி திரையுலக பிரபலங்கள் அந்த நிகழ்ச்சிக்கே போகாமல் ஆப்சென்ட் ஆகிவிட்டார்களாம். போனவர்களில் சிலரும் உடனே தலையைக்காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்களாம்.

டிவிக்கு முழுக்கு போடும் தொகுப்பாளினி

முருங்கைக்காய் இயக்குநர் வீட்டு மருமகளாகப் போகும் தொகுப்பாளினி விரைவில் சின்னத்திரைக்கு முழுக்கு போடுவார் என்று கூறப்படுகிறது. ஆடல் பாடல், இயக்குநர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அவர் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

நீண்ட நாள் காதலித்த தொகுப்பாளினிக்கு முதலில் மாப்பிள்ளை வீட்டு தரப்பில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. காரணம் மகளை நினைத்துதான் முருங்கைக்காய் இயக்குநர் தடை போட்டார்.

இப்போது கிரீன் சிக்னல் காட்டிவிடவே தன்னுடைய தொகுப்பாளினை வேலையை மூட்டை கட்டிவிடலாம் என்று முடிவு செய்து விட்டாரம். இயக்குநர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போதே சினிமா வாய்ப்புகள் வந்தது. அப்பா அம்மா அனுமதித்தால் சினிமாவில் நடிப்பேன் என்று கூறினார். திடீரென்று திருமணம் நிச்சயமாகவே சின்னத்திரைக்கே டாட்டா காட்ட முடிவு செய்துவிட்டாராம் தொகுப்பாளினி.

 

Post a Comment