ஜெயலலிதா பதவியேற்பு விழா... ரஜினி பிரசென்ட்... கமலைக் கூப்பிடவில்லையோ?

|

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை அடைந்த ஜெயலலிதா 8 மாதங்களுக்குப் பின்னர் இன்று காலை மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

இந்த விழாவில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டாலும் நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஒருசேரக் கவர்ந்துள்ளது.

Superstar Rajinikanth in attendance as Jayalalithaa takes oath

217 நாட்களாக வீட்டிலேயே இருந்த ஜெயலலிதா நேற்று முதன் முறையாக வெளியே வந்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து தனது வனவாசத்தை முடித்தார். தொடர்ந்து இன்று காலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த விழாவில் மீண்டும் 5வது முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருடன் சேர்ந்து 28 அமைச்சர்கள் பதவியேற்ற இந்த விழாவில் இசைஞானி இளையராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்,இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்டாலும் நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொண்டதே ஹைலைட் ஆக அமைந்தது.

பொதுவாக விழாக்களில் அதிகம் கலந்து கொள்ள விரும்பாத ரஜினி இதில் கலந்து கொண்டது பலபேரது ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஒருசேரத் தூண்டியுள்ளது. அதேசமயம் இன்னொரு முக்கிய நடிகரான கமல்ஹாசனைக் காணவில்லை. அதேபோல பிற பிரபல நடிகர்களையும் காணவில்லை. அவர்களுக்கு அழைப்பு போகவில்லை போலும்...

 

Post a Comment