மஞ்சு மனோஜ் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி!

|

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனும் தெலுங்குத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவுமான மஞ்சு மனோஜ் திருமணம் மே 20 அன்று நடைபெற்றது.

இதற்கு அரசியல் பிரமுகர்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.

மஞ்சு மனோஜின் குடும்பத்தினர் பிரதமர் நரேந்திர மோடியையும் திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தனர். மோடி வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கபட்ட இவ்விழாவில் அலுவலக வேலையின் காரணமாக பிரதமரால் வர முடியவில்லை.

ஆனால் தான் வரமுடியாவிட்டாலும் தனது வாழ்த்துக்களை கடிதம் மூலமாக அனுப்பியுள்ளார் மோடி. இதில் மகிழ்ந்து போன மஞ்சு மனோஜ் குடும்பத்தினர் அதனை சமூக வலைதளங்களில் (ட்விட்டர்) வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

Post a Comment