ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கப் போகும் அடுத்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கோடம்பாக்கம் முழுக்க ரஜினியின் அடுத்தடுத்த படங்கள், அவற்றின் இயக்குநர்கள், நடிக்கப் போகிறவர்கள் பற்றித்தான் பேச்சாக உள்ளது.
ரஜினி முதலில் நடிக்கப் போவது கலைப்புலி தாணு தயாரிப்பில், ரஞ்சித் இயக்கும் படத்தைத்தான். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட வராத நிலையில் படத்துக்கும் தனக்கும் கிடைத்திருக்கும் பப்ளிசிட்டியைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறரார் ரஞ்சித்.
அதான் ரஜினி சார்... என்று அவரிடம் கூறி, திரைக்கதையை பக்காவாக முடிக்குமாறு தாணு கூறியுள்ளாராம்.
இந்தப் படத்தில் ரஜினிக்கு டூயட் இல்லை என்றாலும், நாயகி இல்லாமல் சரியாக இருக்காது என்பதால், நயன்தாராவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.
ரஜினியுடன் நடிப்பது நயன்தாராவுக்கு இது நான்காவது முறை. சந்திரமுகியில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன், பின்னர் சிவாஜியில் ஒரு குத்துப்பாடலுக்கு ரஜினியுடன் துள்ளாட்டம் போட்டார். குசேலனில் ஜோடியாக வந்தார். இப்போது ரஞ்சித் படத்தில் ரஜினியின் நாயகியாகியிருக்கிறார்.
Post a Comment