"டார்லிங்" பேயை விடுங்க... தமிழ் சினிமாவைக் கலக்கும் ஆண் "பேய்கள்"

|

சென்னை: எத்தனை நாளைக்கு தான் பெண்களே பேயாக நடிப்பது என்று யோசித்தார்களோ என்னவோ தமிழ் சினிமாவில் வரிசையாக ஆண் பேய்களின் ஆதிக்கம் ஆரம்பித்து உள்ளது.

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். ஆனால் தமிழ் சினிமாவிலோ, பெண்களையே பேய்களாக்கி விட்டனர். காஞ்சனா பேய், கங்கா பேய், டார்லிங் பேய் என்ற பெண் பேய்கள் ஏகத்திற்கு வலம் வந்தன.

demonte colony movie

ஆனால், பேய் என்றால் அது பெண்கள் தான் என்று இருந்த தமிழ் சினிமாவில் மாற்றம் உருவாக ஆரம்பித்து விட்டது.தமிழ் சினிமாவில் இது பேய்களின் வருடம் போல. முன்னணி நடிகர்கள் தொடங்கி அறிமுக நடிகர்கள் வரை பேய் படமா ஓகே ஷூட்டிங் போய்டலாம் என்று கூற ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நிலையில், நாளை வெளியாக இருக்கும் டிமாண்டி காலனி படத்தில் அருள்நிதி பேயாக வருகிறாராம். அதே போல கமர்கட்டு படத்திலும் யுவன், ஸ்ரீராம் இருவருமே பேயாக வருகிறார்களாம்.

சூர்யா நடித்து வெளிவர இருக்கும் மாஸ் திரைப்படமும் பேய் படம் தான் என்பது குறிப்பிடத் தக்கது.

 

Post a Comment