சூர்யா தயாரித்து நடிக்க, பாண்டிராஜ் இயக்கி வரும் 'ஹைக்கூ' படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் தோற்ற போஸ்டர்கள் இணையத்தில் வெளியானது.
சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் குழந்தைகள் பலர் நடித்து வரும் படம் 'ஹைக்கூ'. பிசாசு பட இசையமைப்பாளர் ஆரோல் கொரெலி இசையமைத்து வரும் இப்படத்துக்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
பாண்டிராஜ் இயக்கி வருகிறார். முதல் பிரதி அடிப்படையில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.
சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வந்த 'இது நம்ம ஆளு' படத்தின் தாமதத்தால் 'ஹைக்கூ' படத்தை துவங்கினார் பாண்டிராஜ். இப்போது படப்பிடிப்பையே முடித்துவிட்டார்.
சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் 'மாஸ்' படத்துடன் 'ஹைக்கூ' படத்தின் டீஸர் இணைக்கப்பட்டுள்ளது. இன்று சமூக வலைதளங்களில் 'ஹைக்கூ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இன்று மாலை 'ஹைக்கூ' டீஸரையும் யூ - டியூப் தளத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
Post a Comment