சென்னை: நடிகர் சங்கத் தலைவராக விஷாலுக்கு விருப்பம் இருந்தால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். நானும் அந்த தேர்தலில் போட்டியிடுவேன், என்றார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.சரத்குமார்.
இதுகுறித்து திருச்சியில் அவர் அளித்த பேட்டி:
"தோல்வி பயத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் எதிர்க்கட்சிகளே ஒதுங்கியுள்ள நிலையில், டிராபிக் ராமசாமி போட்டியிடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.
எனக்கும், நடிகர் விஷாலுக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்னையும் இல்லை. சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தவறான கருத்துகள் பேசுவது கண்டிக்கத்தக்கது.
நடிகர் சங்கத் தலைவராக வர வேண்டும் என்றால் அவர் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கட்டும். அதே நேரம் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் நான் போட்டியிடுவேன். அதில் மாற்றமில்லை," என்றார்.
Post a Comment