சென்னை: க்யூப், யுஎப்ஓ நிறுவனங்களுக்கு எதிராக திரையுலகினர் அறிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து சினிமா அமைப்புகளும் பங்கேற்கின்றன.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தமிழ்த் திரையுலகிற்கு மிகுந்த பொருளாதார சிரமத்தை கொடுத்து வரும் க்யூப், யு.எப்.ஓ மற்றும் பி.எக்ஸ்.டி போன்ற டிஜிட்டல் நிறுவனங்களிடம் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது.
தமிழ்த் திரையுலக உரிமைகளை மீட்டெடுக்க தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தவறாமல் கலந்துக் கொண்டு, ஒத்துழைப்பு தருமாறு தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.
நாளை நடக்கும் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து சங்கங்களும் போராட்டத்தில் பங்கேற்பதாகவும் அறிவித்துள்ளன.
Post a Comment