சென்னை : இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சினையைக் கதைக்களமாகக் கொண்ட ‘கமரகட்டு' படம் வரும் 22ம்தேதி ரிலீசாக இருக்கிறது.
‘சாட்டை' படத்தின் நாயகன் யுவன் மற்றும் ‘பசங்க' ஸ்ரீராம் இணைந்து நடித்திருக்கும் புதிய படம் ‘கமரகட்டு'. ராம்கி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரக்ஷாராஜ், மனிஷா ஜித் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். ரீவ்ஸ் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் வழங்க ஸ்ரீதன்ஷா இன்னோபேஷன்ஸ் சார்பில் சந்திரமோகன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
பிளஸ்-2 முடித்துவிட்டு காலேஜ் செல்லும் பருவ வயதில் இருக்கும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினை தான் கதைக்களம்.
காதலில் தொடங்கி, அமானுஷ்ய சக்தியைக் காட்டி திகில் கூட்டி, இறுதியில் ஆன்மீகத்தைக் கொண்டு முடியும் வகையில் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. தமிழ் சினிமாவிற்கு இந்த திரைக்கதை புதிதாக இருக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.
சென்னை, திருவண்ணமாலை, தலக்கோணம் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. வரும் 22ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.
இதே தேதியில் தான் ‘விந்தை', ‘டிமான்ட்டி காலனி' ஆகிய படங்களும் வெளியாகவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment