மும்பை: பாலிவுட் நடிகை மலாய்க்கா அரோரா கான் தான் கலந்து கொண்ட டிவி நிகழ்ச்சி ஒன்றில் பார்க்க தன்னைப் போன்றே உள்ள பெண்ணை சந்தித்தார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானின் மனைவி நடிகை மலாய்க்கா அரோரா. மலாய்க்கா பாலிவுட் படங்களில் குத்துப்பாட்டுக்கு ஆடுவதற்கு பெயர் பெற்றவர். குத்தாட்டமா கூப்பிடு மலாய்க்காவை என்று கூறும் அளவுக்கு பிரபலமானவர்.
மலாய்க்கா, பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார், இந்தி நடிகை கிரண் கேர் ஆகியோர் இந்தியா ஹேஸ் காட் டேலன்ட் என்ற நிகழ்ச்சியில் நடுவர்களாக உள்ளனர். கலர்ஸ் தொலைக்காட்சியில் வார இறுதி நாட்களில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
கடந்த வார நிகழ்ச்சியின்போது மேடையில் பச்சை நிற உடையில் ஒரு பெண் நடனமாடினார். நடுவர் மலாய்க்கா தான் ஆடுகிறார் என்று பார்வையாளர்கள் நினைத்துவிட்டனர். அதன் பிறகு மலாய்க்கா மேடைக்கு வந்தபோது தான் மேடையில் ஆடிய பெண் வேறு யாரோ என்று தெரிய வந்தது.
பச்சை நிற ஆடையில் ஆடிய பெண் பார்ப்பதற்கு அச்சு அசலாக மலாய்க்கா போன்றே உள்ளார். பின்னர் மலாய்க்காவும், அந்த பெண்ணும் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
Post a Comment