சென்னை: நேற்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்பட்ட தனுஷின் மாரி பட டீசருக்கு ரசிகர்களிடையே தொடர்ந்து எதிர்ப்புகள் வெளியாகி வருகின்றன.
படத்தில் தனுஷ் சிகரெட் பிடிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதைப் பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து சிகரெட் பிடிப்பது போல காட்சிகளை தனுஷ் தன் படத்தில் வைப்பதா என்று கடுமையான கேள்விகளை சமூக வலைதளங்களில் கேட்டு உள்ளனர்.
படத்தின் டீசர் முழுதுமே புகைபிடித்துக் கொண்டு தனுஷ் நடந்து வருவது போன்றே உள்ளது. ஏற்கனவே தனது வேலை இல்லாப் பட்டதாரி படத்தில் புகைப்பது போன்ற காட்சிகளை தனுஷ் வெளியிட்ட போது பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. நேற்று மாரி டீசரினால் இப்பிரச்சினை மீண்டும் கிளம்பியுள்ளது.
மாமனார் ரஜினிகாந்தே தனது படங்களில் புகைப்பது போன்ற காட்சிகளை நீக்கியுள்ள நிலையில் மருமகன் தனது படங்களில் (மரியான், அநேகன், வேலை இல்லாப் பட்டதாரி ) தொடர்ந்து புகை பிடிக்கும் காட்சிகளை வைப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தேசிய விருது பெற்ற நடிகருக்கு சமூகப் பொறுப்பு சற்றும் இல்லையா? புகை பிடிப்பது தான் ஆண்மையின் அடையாளமா? டீசர் கண்டிக்கத்தக்க ஒன்று போன்ற கேள்விகளால் சூடாகிக் கிடக்கின்றன சமூக வலைதளங்கள்.
Post a Comment