அட்டகத்தி, மெட்ராஸ் இரண்டிலுமே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் மிக அற்புதமாகச் சொன்ன ரஞ்சித், ரஜினிக்காக அமைத்திருக்கும் கதையும் அரசியல் சார்ந்ததுதானாம்.
இந்தப் படத்துக்கு ரஜினி முதலில் ஒதுக்கியது 30 நாட்கள்தானாம். பின்னர் தாணு கேட்டுக் கொண்டதால் 45 நாட்கள் ஒதுக்கித் தந்திருக்கிறார்.
மொத்தம் 90 நாட்களில் படத்தை முடித்துவிடத் திட்டம். ரஜினி உள்ள காட்சிகளை 45 நாட்களும், ரஜினி இல்லாத காட்சிகளை மீதி 45 நாட்களும் எடுக்கத் திட்டம்.
தனது சினிமா உலகப் பயணத்தில் ஆரம்பத்திலிருந்தே நட்பாகத் திகழும் தாணுவுக்கு, தாம் செய்யும் உதவியாக இந்தப் பட வாய்ப்பைத் தந்திருக்கிறார் ரஜினி.
இன்றைக்கு சினிமா இளைஞர்கள் கைகளில் வேறு பரிமாணத்துக்குப் போய்விட்டது. அதை உணர்ந்து, அவர்களுடன் பயணிக்கவே, கார்த்திக் சுப்பராஜ், ரஞ்சித் போன்றவர்களிடம் கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார் ரஜினி.
ரஞ்சித்தை ரஜினியிடம் அழைத்துச் சென்றதே சவுந்தர்யா ரஜினிதானாம்.
இந்தப் படம் விறுவிறுப்பான அரசியல் - ஆக்ஷன் படமாக இருக்கும் என்கிறார்கள். படத்தில் அநேகமாக ரஜினிக்கு ஜோடி இருக்காது என்றும் கூறப்படுகிறது.
பொதுவாகவே அரசியல் படங்களில் நடிப்பதைத் தவிர்ப்பவர் ரஜினி. முதல்வன், ஐயா போன்றவரை அவர் கடைசி நேரத்தில் தவிர்த்த படங்கள்.
அப்படிப்பட்ட ரஜினி, இப்போது தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் களத்தை பின்னணியாகக் கொண்ட கதையில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment