சினிமாவில் நான் ஹீரோவாக வெற்றி பெற சந்தானமும் ஒரு முக்கிய காரணம் என்றார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.
நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் இனிமே இப்படித்தான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சத்யம் சினிமாஸில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "நான் நடிகனாக வெற்றி பெற்றதற்கு இயக்குனர் ராஜேஷும், நடிகர் சந்தானமும் தான் காரணம். அதே போல் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்தின் நடனம் எனக்குப் பிடித்திருந்தது. சந்தானத்தைப் பார்த்த பிறகு நானும்ம் நடனத்தின் மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்," என்றார்.
இவ்விழாவில் நடிகர் ஆர்யா, வி.டி.வி. கணேஷ், நடிகர் சிலம்பரசன், தம்பி ராமையா, பாடகர் கானா பாலா ஆகியோரும் பங்கேற்று பேசினர்.
முதல் முறையாக நடிகர் சந்தானத்தின் தந்தையும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
Post a Comment