ஹைதராபாத்: நடிச்சது போதும் கல்யாணம் பண்ணிக்கம்மா என்று சொன்ன பெற்றோர்கள் தற்போது கல்யாணம் பண்ணிட்டே நடிம்மா அப்படி ஒரு மாப்பிளைய உனக்காக பாக்குறோம் என்று கெஞ்சவே திருமணத்திற்கு சம்மதித்து இருக்கிறார் நடிகை அனுஷ்கா.
ரெண்டு படத்தில் மாதவனின் ஜோடியாக தமிழில் அறிமுகமான நடிகை அனுஷ்கா அருந்ததி என்ற சரித்திரப் படத்தில் நடித்ததின் மூலம் வரலாற்றுப் படங்களா கூப்பிடு அனுஷ்காவை என்று சொல்லுமளவிற்கு தென்னிந்தியத் திரைப் படங்களில் பேரும் புகழும் பெற்றவர்.
உலக அளவில் எல்லோரின் கவனத்தையும் தொடர்ந்து ஈர்த்து வரும் பாகுபாலி படம் அனுஷ்காவை மையமாகக் கொண்டே எடுக்கப் பட்டு வருவது அனைவரும் அறிந்ததே
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக படம் நீண்டு கொண்டே செல்கிறது எனவே இந்தப் படத்துடன் திருமணம் செய்து கொள், திருமணத்திற்கு பிறகும் உன் நடிப்பை தொடரலாம் என்று பெற்றோர்கள் கூற தற்போது திருமணத்திற்கு சம்மதித்து விட்டாராம் அனுஷ்கா.
மூன்று வருடங்களுக்கு மேலாக திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகள் வந்த போதெல்லாம் மறுத்துப் பேசியவர் தற்போது அப்படி எதுவும் கூறவில்லை எனவே விரைவில் அனுஷ்காவின் திருமணத்தை எதிர்பார்க்கலாம் என்று கும்மியடிக்கின்றன டோலிவுட் வட்டாரங்கள்.
மாப்பிள்ளை ரெடியாக இருக்கிறார், அனுஷ்காவின் சம்மதம் என்ற ஒற்றை வார்த்தைக்காகத் தான் காத்து இருக்கின்றனர் அவரது பெற்றோர்கள். அனுஷ்கா சம்மதம் என்றால் திருமணம் ரெடி.
மாப்பிள்ளை ராணிக்கேத்த ராஜாவாக இருப்பாரா...
Post a Comment