சென்னை: முன்னால் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதை போயஸ் கார்டனில் உள்ள கோவில் முன்பு தேங்காய் உடைத்துக் கொண்டாடினார் மாஜி கவர்ச்சி நடிகை பபிதா.
தமிழ்நாடு முழுவதும் நேற்றில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வெடி வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தொண்டர்கள் மட்டும் அல்லாது அமைச்சர்கள் தரப்பில் இருந்தும் வேண்டுதல்கள் கோவில்களில் நிறைவேறிய வண்ணம் உள்ளன.
பபிதா
இதில் முன்னாள் கவர்ச்சி நடிகையும் அதிமுக தலைமைக் கழக பேச்சாளருமான நடிகை பபிதா நேற்று போயஸ் கார்டன் வந்து அங்கு உள்ள கோவிலில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினார் .
ஜெயலலிதா விடுதலை :
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னால் முதல்வர் ஜெயலலிதா நேற்று விடுதலை செய்யப் பட்டார். நேற்று காலையில் தீர்ப்பு வந்ததில் இருந்து போயஸ் கார்டன் முழுவதும் ஏராளமான தொண்டர்கள் கூடி நின்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிறைவேறிய வேண்டுதல்கள்:
தீர்ப்பு சாதகமாக வெளிவந்ததைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய வண்ணம் உள்ளனர்.
கவர்ச்சி நடிகை பபிதா:
தமிழ்ப் பட உலகின் முன்னால் கவர்ச்சி நடிகை பபிதா இவர் அதிமுக தலைமைக் கழக பேச்சாளாராக இருந்து வருகிறார். ஜெயலலிதா நேற்று விடுதலை செய்யப் பட்ட செய்தியைக் கேள்விப் பட்ட இவர் நேற்று போயஸ் கார்டன் வந்தார்.
வேண்டுதலை நிறைவேற்றிய பபிதா :
போயஸ் கார்டன் ரோட்டோரத்தில் உள்ள கோவிலில் தேங்காயை உடைத்து ஜெயலலிதா விடுதலை செய்யப் பட்டதற்காக தனது நேர்த்திக் கடனை நேற்று செலுத்தினார்.
பபிதா உடைத்த தேங்காய்கள் சாலையோரமாக சிதறிக் கிடந்தன. இவற்றை பின்னர் அதே கோணிப் பையில் அள்ளிச் சென்று விட்டனர்.
Post a Comment