சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் சித்தி தயாரிக்கும் சீரியலில் நடித்த காரணத்தினால்தான் பிரபலமானார் அந்த ஹீரோ.
ட்விட்டர், ஃபேஸ்புக் என ரசிகர் மன்றம் வைக்கும் அளவிற்கு உயர்ந்தார் அந்த ஹீரோ. கடந்த சில நாட்களாக அந்த ஹீரோவை சின்னத்திரையில் பார்க்க முடியவில்லை.
காரணம் என்னவாக இருக்கும் என்று தேடி வருகின்றனர் அவரது ரசிகர்கள். ஆனால் மதுரைக்கார அந்த சின்னத்திரை ஹீரோவிற்கு பெரியதிரையில் ஜொலிக்கவேண்டும் என்பதுதான் ஆசையாம்.
அதற்கான தீவிர முயற்சியில் திருவினையாகிவிட்டதாம். விரைவில் பெரிய திரையில் படத்தை பார்க்கலாம் என்கின்றனர்.
Post a Comment