செல்வராகவனுடன் "கானகம்" போகும் சிம்பு!

|

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘கானகம்' என பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘இரண்டாம் உலகம்' படத்திற்கு பிறகு செல்வராகவன், சிம்புவை வைத்து இயக்கும் புதிய படம் ‘கானகம்'. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக முதலில் திரிஷா ஒப்பந்தமானார். ஏற்கனவே, இவர்கள் இருவரும் விண்ணத் தாண்டி வருவாயா படத்தில் நடித்திருந்தனர்.

Simbu film named as Kanagam ?

ஆனால், திடீரென திரிஷா இப்படத்திலிருந்து விலகவே, அவருக்குப் பதிலாக மெட்ராஸ் பட நாயகி கேத்ரின் தெரசா சிம்புவுக்கு ஜோடியாகியுள்ளார். இப்படத்தில் நடிகை டாப்ஸியும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாமலேயே சமீபத்தில் இப்படத்திற்காக பூஜை போடப்பட்டது.

இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு ‘கானகம்' என்று பெயர் வைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘காதல்கொண்டேன்', ‘7ஜி ரெயின்போ காலனி' போன்ற செல்வராகவனின் காதல் படங்கள் வரிசையில் இந்த படம் காதல் பின்னணியில் உருவாக இருக்கிறது. விரைவில் இதன் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.

 

Post a Comment