சினிமாவில் பிரபலமாக இருந்தபோதே கேட் தாண்டி குதித்து உதவி இயக்குநரின் கரம் பிடித்தவர் அந்த தேவ நடிகை. குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆனவர் சின்னத்தரையில் கோலம் போட வந்தார். சூரிய டிவியில் 5 ஆண்டுகாலம் ஓடியது அந்த சீரியல். அதன்பின்னர் அரச டிவியில் இரட்டை வேடத்தில் நடித்தார். அந்த சீரியலும் பிரபலமானது. அப்புறம் சூரிய டிவிக்காக இரட்டை வேடத்தில் போலீஸ் யூனிபார்ம் போட்டார் நாயகி. அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே கழன்று கொண்டார். கணவரை கதாநாயகனாக்கி ஜோடியாக நடித்து படம் எடுத்தார். படம் பாதி நாள் கூட ஓடியதோ இல்லையோ, 100வது நாள் விழா எடுத்து கலக்கினார். கை நஷ்டப்பட்டதுதான் மிச்சம். கடைசியில் கான்வென்ட் டீச்சராக வேலை செய்தார். ஆனாலும் ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதே மீண்டும் சீரியலில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறாராம்.
நைட்டி விளம்பரம், மசாலா பொடி விளம்பரம் என சின்னத்திரை வழியாக வந்து போனாலும் சீரியலில் நடித்தது போல வருமா என்று கேட்கும் நாயகி, சீரியல் இயக்குநர்களுக்கு தூது விட்டுள்ளார். அம்மணியில் பல்ஸ் பார்த்த இயக்குநர்களோ, டைட்டில் ரோல் இல்லை, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்களா என்று கேட்கிறார்களாம்.
வேற வழி.. கிடைச்சதை ஏற்றுக்கொண்டுதானே ஆகணும் என்று தேவ நடிகையும் சம்மதம் சொல்லியிருக்கிறாராம். விரைவில் சின்னத்திரையில் நாயகி கோலம் போட வருவார் என்று எதிர்பார்கலாம்.
Post a Comment