மொட்டை ராஜேந்திரன் காமெடியில் கலக்கும் நண்பர்கள் நற்பணி மன்றம்!

|

‘வைகாசி பொறாந்தாச்சு', ‘கிழக்கே வரும் பாட்டு' போன்ற படங்களை இயக்கிய ராதாபாரதி நீண்ட இடைவெளிக்குப்பிறகு இயக்கியுள்ள படம் "நண்பர்கள் நற்பணி மன்றம்".

பார்ப்பவர்கள் வயிறு குலுங்க சிரிக்கும் அளவுக்கு நகைச்சுவையுடன், நட்புக்கு புது அர்த்தம் தரும் படமாகவும் இந்த நண்பர்கள் நற்பணி மன்றம் உருவாகியுள்ளதாம்.

Nanbargal Narpani Manram

இப்படத்தின் நாயகனாக புதுமுகம் செங்குட்டுவனும், நாயகியாக புதுமுகம் அக்ஷயாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் தமிழ் திரையுலகில் தற்போது காமெடியில் கலக்கி வரும் ‘நான் கடவுள்' ராஜேந்திரன் மற்றும் ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, இமான் அண்ணாச்சி என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் காமெடியில் அதகளம் செய்துள்ளார்களாம்.

‘இவனுக்கு தண்ணியில கண்டம்' படத்தில் நகைச்சுவையில் கலக்கிய ராஜேந்திரன், இப்படத்தில் ஆட்டுக்கறி விற்பனை செய்பவராகவும், ஆனால் அந்த வெட்டப்பட்ட ஆட்டின் மீது கருணை காட்டுபவராகவும் வருகிறாராம்.

இப்படத்தில் ஆடுவெட்டி விற்பனை செய்பவராக நடிக்கும் ‘நான் கடவுள்' ராஜேந்திரன் ஹீரோவை கத்தியுடன் துரத்துவது போன்ற காட்சிகள் தேனியில் படமாக்கப்பட்ட போது அதனை ஏராளமான பொதுமக்கள் டென்சனாகிவிட்டார்களாம். அது படப்பிடிப்பு என்பதை உணராமல் அவர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து பின்னர் அது படப்பிடிப்பாக்க நடைபெற்ற துரத்தல் சம்பவம் என்பதை பொதுமக்களிடம் விளக்கமாக கூறியுள்ளனர். அதன் பிறகே பொதுமக்களும் படப்பிடிப்பு நடப்பதை அறிந்து சிரித்தவாறு கலைந்து சென்றுள்ளனர்.

படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். செல்வா ஆர்எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் வெளியாகிறது நண்பர்கள் நற்பணி மன்றம்.

 

Post a Comment