சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் மற்றும் டிசைன்களை, விஜய்யின் பிறந்த நாளன்று வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், நந்திதா ஸ்வேதா, ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் புதுமையான படம் ‘புலி'.
அதியுச்ச கற்பனைக் கதை ஒன்றில் விஜய் நடிப்பது இதுவே முதல் முறை. படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத்.
'புலி' படத்தின் முதல் புகைப்படங்களாக விஜய் வெள்ளை வேட்டி சட்டையில் நிற்பது போன்ற படங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகின. தற்போது அடுத்த கட்டமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப் போகிறார்கள்.
'புலி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் படத்தின் டீஸர், டிரெய்லர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தேதிகள் இன்னும் வெளியாகவில்லை.
படத்தின் இசையை ஆகஸ்டு மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. எனவே படம் விஜயதசமிக்கு வெளியாகும் என்று தெரிகிறது.
Post a Comment