லாஸ் ஏஞ்செல்ஸ்: விஜய் மோகன் என்ற இளம் அமெரிக்க இயக்குனர் பைக்கில் சென்றபோது நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
மே 1௦ ம் தேதி தனது பைக்கில் சொந்த ஊரை (பிலடெல்பியா) நோக்கி இவர் சென்று கொண்டிருந்த போது ஒரு கார் மோதியது. இதில் விஜய் மோகன் பலத் காயமடைந்து உயிரிழந்தார்.
26 வயதான விஜய் மோகன் சிகாகோவில் பிறந்தவர். தனது உயர்நிலைக் கல்வியை இந்தியாவில் பயின்றவர்.
திரைப்படம் மற்றும் ஊடகக் கலைகள் தொடர்பாக டெம்பில் யூனிவர்சிட்டியில் படித்த இவரைப் பற்றி அங்குள்ள தொலைக்காட்சி நிலையம் மிக கண்ணியமாகவும், நேர்மையாகவும் வேலை செய்யக் கூடிய ஒரு இளைஞனை இழந்து விட்டோம் என்று கூறியுள்ளது.
பிலடெல்பியா நகரத்தின் சுற்றுப் புறங்களில் உள்ளவர்களை திரைப்படம் சம்பந்தமாக இணைக்கும் குழு ஒன்றையும் இவர் நடத்தி வந்துள்ளார்.
Post a Comment