தமிழில் வெளியான கல்யாண சமையல் சாதம் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.
பிராமண வீட்டு திருமணத்தின் பின்னணியில் உருவான காதல் கதை கல்யாண சமையல் சாதம். இதில் பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்திருந்தனர்.
ஆர் எஸ் பிரசன்னா இயக்கியிருந்தார். இந்தப் படம் இரு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ரீமேக் ஆகிறது. படத்தைத் தயாரிப்பவர் ஆனந்த் எல் ராய். தனுஷ் நடித்த முதல் இந்திப் படமான ராஞ்ஜனாவை இயக்கியவர்.
இவர் தயாரிக்கும் முதல் படம் இது.
இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாஸன் நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இம்ரான் கான் நடிக்கவுள்ளார்.
இந்த ரீமேக்கில் ஆனந்த் எல் ராயின் பணி, படத் தயாரிப்பு மட்டுமே. தமிழில் இயக்கிய அதே ஆர்எஸ் பிரசன்னாதான் இந்தி ரீமேக்கையும் இயக்குகிறார்.
Post a Comment