ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பால் வடிவேலுவின் ”எலி” பிரஸ் மீட் கேன்சல்

|

சென்னை: ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பால் இன்று மாலை ஆறு மணி அளவில் நடைபெற இருந்த பிரஸ் மீட்டை கேன்சல் செய்துள்ளார் நடிகர் வடிவேலு.

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகரான நடிகர் வடிவேலு கடந்த தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டு தனது மார்க்கெட்டை இழந்தார்.

மீண்டும் பல வருடங்கள் கழித்து தெனாலிராமன் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்த வடிவேலு தற்போது எலி என்ற படத்தில் கதை நாயகனாக நடித்து வந்தார் .

Jayalalitha Judgement Today Actor vadivelu Cancelled His own press meet

பிரஸ் மீட்

எலி படத்தின் படப் பிடிப்பு முடிவடைந்து படம் விரைவில் திரைக்கு வர உள்ளது இதற்கான பிரஸ் மீட் இன்று மாலை ஆறு மணி அளவில் நடை பெற இருந்தது.

ஜெயலலிதா தீர்ப்பு

இன்று ஜெயலிதா தீர்ப்பு வெளிவரும் நிலையிலும் வடிவேலு பத்திரிக்கை யாளர் சந்திப்பை நடத்த இருக்கிறாரே என்று அனைவரும் வியந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் பிரஸ் மீட்டை ரத்து செய்ததாக வடிவேலு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியது.

முன்னேற்பாடாக ரத்தான நிகழ்ச்சிகள்

சூர்யா நடித்த மாஸ் திரைப் படத்தின் பிரஸ் மீட், பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொதுக் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் இன்று நடை பெறுவதாக இருந்தது ஆனால் சில நாட்களுக்கு முன்னரே இவற்றை கேன்சல் செய்து விட்டனர்.

எலி உரிமையை கைப் பற்றிய ஜெயா

இந்நிலையில் எலி படத்தின் உரிமையை ஜெயா டிவி வாங்கி விட்டதாகவும் எல்லாம் முடிந்து மேலிட உத்தரவுக்காக காத்திருப்ப தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Post a Comment