சென்னை: நடிகர் விஜய் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வந்த புலி படம் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில தினங்களில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை படப்பிடிப்புக் குழு வெளியிட உள்ளனர்.
பாடல்களை காட்சிபடுத்துவதற்காக கம்போடியா, பல்கேரியா போன்ற நாடுகளுக்கு சென்ற படக்குழு வெற்றிகரமாக அனைத்தையும் முடித்து விட்டது. தற்போது படத்தின் பின்னணி இசை மற்றும் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் மட்டுமே பாக்கி இதற்காக இயக்குனர் சிம்புதேவன் இரவு பகலாக உழைத்து வருகிறார்.
சுருதி ஹாசன், ஹன்ஷிகா ஆகிய இரு ஹீரோயின்களுடன் சுதீப் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் வருவதாகவும் அதில் ஒரு வேடம் குள்ள மனிதன் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆக்சன் கலந்த பேண்டசி படமான புலி விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல டிரீட் தான்.
விஜய் அண்ணா புலி'யக் கண்ணுல சீக்கிரமா காட்டுங்ணா....!
Post a Comment