இது நம்ம ஆளு சீக்கிரம் முடிஞ்சிடும் –பாண்டிராஜ் நம்பிக்கை

|

சென்னை: சில நாட்களுக்கு முன்னர் இது நம்ம ஆளு படத்தை முடித்துக் கொடுத்து விட்டு பாண்டிராஜ் அடுத்த படத்தை இயக்க வேண்டும் என்று சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, பணம் இருந்தால் சொல்லுங்கள் முடித்துக் கொடுக்கிறேன் என்று பாண்டிராஜ் காட்டமாக பதில் கூறினார் அல்லவா.

Idhu namma Aalu to definitely release this year, Pandiraj

அந்த வழக்கில் இப்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆம், இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவின் ஹைக்கூ படம் முடிந்து விட்டது, இனி சிம்புவின் இது நம்ம ஆளு படத்தை சீக்கிரமாக முடிக்க போகிறேன் என்று கூறியுள்ளார்.

இது நம்ம ஆளு என்னுடைய சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம். எனவே சீக்கிரமே இந்தப் படத்தை முடிக்க முயற்சி செய்கிறேன். சிம்புவை இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நீங்கள் பார்ப்பீர்கள் என்று கூறியிருக்கிறார்.

 

Post a Comment