சிவகார்த்திகேயனுடன் காதல் வயப்பட்டுள்ளதாக வரும் செய்திகளை மறுத்துள்ளார் நடிகை அஞ்சலி.
சிவகார்த்திகேயனும் அஞ்சலியும் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த சில நாட்களாக ஒன்றாக தங்கி இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட செல்பி படமும் இணையத்தில் உலா வருகிறது.
ஏற்கெனவே திருமணம் ஆனவர் சிவகார்த்திகேயன். அஞ்சலி ஏற்கெனவே சித்தியுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியவர்.
சிவகார்த்திகேயன் இப்போது பாக்ஸ் ஆபீசில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அஞ்சலி சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில்தான் இருவருக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த செய்திகளை அஞ்சலியின் மேனேஜர் மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், "அஞ்சலி சமீபத்தில் சென்னைக்கு வரவே இல்லை. படப்பிடிப்புகளில் பங்கேற்பதோடு சரி. சிவகார்த்திகேயனை சமீபத்தில் அவர் சந்திக்கவே இல்லை. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடிகர்- நடிகைகள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் பங்கேற்றார்கள். அப்போதுதான் இருவரும் சந்தித்தார்கள். சிவகார்த்திகேயனையும், அஞ்சலியையும் இணைத்து வெளியான செய்தியில் உண்மை இல்லை. தவறானவை,'' என்றார்.
ஆனால் சிவகார்த்திகேயன் இதுகுறித்து எதுவும் கூறவில்லை.
Post a Comment