சிறு முதலீட்டுப் படங்களைக் காக்கும் நோக்கில், பட வெளியீட்டில் தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள நிபந்தனைகள் வரும் ஜூன் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் வாரம்தோறும் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் வெற்றி பெறும படங்கள் மிகச் சிலதான்.
சிறு முதலீட்டுப் படங்கள் வந்ததும் தெரியாமல் போனதும தெரியாமல் காணாமல் போகும் நிலை உள்ளதால், பட வெளியீட்டை முறைப்படுத்த சில கட்டுப்பாடுகளை தயாரிப்பாளர் சங்கம் சில மாதங்களுக்கு முன் கொண்டு வந்தது. ஆனால் அவை இன்னமும் அமலுக்கு வரவில்லை.
இந்த நிலையில் க்யூப் மற்றும் யுஎப்ஓ நிறுவனங்களுக்கு எதிராக வரும் மே 10-ம் தேதி தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையுலக அமைப்புகள் உண்ணாவிரதம் அறிவித்துள்ளன.
இந்த உண்ணாவிரதத்தின்போது, பட வெளியீட்டுக்கான கட்டுப்பாடுகளை அமல் படுத்துவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறதாம் தயாரிப்பாளர் சங்கம்.
வரும் ஜூன் முதல் தேதியிலிருந்து இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். இதன்படி ஜூன் முதல் தேதியிலிருந்து ஆண்டுக்கு 10 பண்டிகை மற்றும் சிறப்பு தினங்களில் மட்டும் பெரிய படங்களை வெளியிட முடியும். மற்ற நாட்களில் சிறு மற்றும் நடுத்தர முதலீட்டுப் படங்கள் வெளியாகும்.
Post a Comment