செல்வராகவனுக்கு ஹீரோயின் கிடைச்சாச்சு... த்ரிஷாவுக்கு பதில் கேதரைன் தெரசா!

|

செல்வராகவன் படத்திலிருந்து திடீரென த்ரிஷா விலகிக் கொண்டார் அல்லவா... இப்போது வேக வேகமாக மாற்று ஹீரோயினைத் தேடிப் பிடித்துவிட்டார் செல்வா.

மெட்ராஜ் படத்தில் நடித்த கேதரைன் தெரசாதான் அவர்.

Catherine Tresa replaces Trisha

சிம்புவும், த்ரிஷாவும் ஏற்கெனவே ‘அலை', ‘விண்ணைத்தாண்டி வருவாயா' ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியிருந்தார்.

ஆனால் செல்வராகவன் படக்குழுவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்தார் த்ரிஷா. போட்டோ ஷூட்டிலெல்லாம் கலந்து கொண்ட அவர், இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்தார். வருண் மணியன் இந்த படத்தைத் தயாரிக்க திட்டமிட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

த்ரிஷா விலகிவிட்டதால், அவருக்கு பதிலாக வேறொரு நாயகியை நடிக்க வைக்க படக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கடைசியாக, ‘மெட்ராஸ்' பட நாயகி கேத்ரைன் தெரசாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இப்படத்தில் டாப்சியும் இன்னொரு நடிகையாக ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றே இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

துள்ளுவதோ இளமை தொடங்கி, புதுப்பேட்டை வரை கலக்கிய கூட்டணியான செல்வராகவன், யுவன், அரவிந்த் மூவரும் மீண்டும் இணையும் படம் இதுதான்.

 

Post a Comment