ஹைதராபாத்: ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமன்னாவின் "அவந்திகா" போஸ்டரை வெளியிட்டுள்ளது பாகுபாலி படக் குழு.
பாகுபாலி படத்தில் நடித்து வரும் அனைவரின் படத்தையும் ஒவ்வொன்றாக வெளியிட்ட இயக்குனர் தற்போது தமன்னா பிங்க் கலரில் உடை அணிந்து நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு புண்ணியத்தைக் கட்டிக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே படத்தின் நாயகி அனுஷ்கா, நாயகன் பிரபாஸ், சத்யராஜ், மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் படங்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வெளியாகிய தமன்னாவின் புகைப்படமும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருக்கிறது.
ஏற்கனவே வெளியான போஸ்டர்கள் ஹாலிவுட் படங்களின் காப்பி என்று நெட்டிசென்கள் ஒரு புறம் வறுத்தெடுத்தாலும் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இந்திய அளவில் உள்ளது. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்க கேகே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த போஸ்டர் எந்த படத்தோட காப்பின்னு கொளுத்திப் போடப் போறாங்களோ..!
Post a Comment