மும்பை: சல்மான் கான் மீது மேலும் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. அது மான் வேட்டையாடிய வழக்காகும். அது ராஜஸ்தான் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
நடிகர் சஞ்சய்தத் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுதம் பதுக்கியதாகவும், ஆயுதம் பதுக்கலுக்கு இடம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றார். அவர் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது பரோலில் வந்து நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டு காலத்தைத் தள்ளுகிறார்.
தற்போது நடிகர் சல்மான் கான் கார் விபத்து வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்.
இதுதவிர நடிகர் சல்மான்கான் மீது ராஜஸ்தானில் மான் வேட்டையாடிய வழக்கு ஒன்றும் உள்ளது. இதில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தண்டனையை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் ராஜஸ்தான் அரசு அப்பீல் செய்துள்ளது. அங்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
நடிகர் சல்மான்கான் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தார். அவருக்கு வயது 49. இன்னும் திருமணம் ஆகவில்லை. தாய், சகோதரர், சகோதரியுடன் மும்பையில் வசித்து வந்தார்.
கட்டான உடலமைப்பு கொண்ட இவர் 1989-ல் மைனோ பியார் கியா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார். டி.வி. நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார்.
பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஹெலன் இவரது வளர்ப்பு தாய் ஆவார். ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், சங்கீதா பிஜ்லானி, சோமி அலி என இவரது முன்னாள் தோழிகள் பட்டியல் பெரிது.
Post a Comment