சென்னை: எந்த நேரத்தில் படத்தை ஆரம்பித்தாரோ தெரியவில்லை இது நம்ம ஆளு படம் முடிவதற்குள் பாதி ஆளாகி விடுவார் போல இயக்குனர் பாண்டிராஜ்.
இது நம்ம ஆளு படம் ஆரம்பிக்கப்பட்ட போது அந்தப் படத்தின் வியாபாரமே பெரிய அளவில் இருந்தது, சிம்புவின் முன்னாள் காதலியான நடிகை நயன்தாரா பழைய கசப்புகளை மறந்து இதில் நடிக்க சம்மதித்து இருந்தார்.
ஆனால் அடுத்தடுத்து சிம்புவின் கால்ஷீட் பிரச்சினை, சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைக்க தாமதப்படுத்துகிறார் என்று அடுக்கடுக்காக எழுந்த பிரச்சினைகளால் ஏண்டா இந்தப் படத்தை ஆரம்பித்தோம் என்று ஏற்கனவே நொந்து போயிருந்த பாண்டிராஜ் தற்போது சிம்புவின் அப்பா டி.ராஜேந்திரரின் புகாரால் இந்தப் படத்தைக் கைவிடலாமா என்று என்னும் அளவிற்கு தர்ம சங்கடத்திற்கு ஆளாகி விட்டார்.
சிம்புவின் வாலு,வேட்டை மன்னன் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக தாமதமான நிலையில் இது நம்ம ஆளு படமும் பிரச்சினையால் பாதியிலே நிற்கிறது. இந்த நிலையில் நடிகர் சிம்புவின் அப்பாவும் இது நம்ம ஆளு படத்தின் தயாரிப்பாளருமான இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்குனர் பாண்டிராஜ் தனது படத்தை முடித்துக் கொடுக்காமல் அடுத்த படங்களுக்கு சென்று விட்டதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
பணம் இருந்தால் சொல்லுங்கள் படத்தை முடித்துக் கொடுக்கிறேன் என்று சற்று காட்டமாகவே இதற்கு பதில் அளித்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
சிம்புவ வச்சுப் படம் எடுத்து முடிப்பதற்குள் பாண்டிராஜ் ரொம்பத் தேய்ந்து விடுவார் போலயே!
Post a Comment