கவர்ச்சி நடிகை அல்போன்சாவுக்கு முன்ஜாமீன் தர கடும் எதிர்ப்பு எழுந்ததால், அவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
தமிழ் பட உலகில் கவர்ச்சி நடிகையான அல்போன்சா அடிக்கடி பரபரப்பில் சிக்கிக் கொள்கிறார்.
ஏற்கனவே இவர் வீட்டில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஒரு பெண்ணின் கணவரை அபகரித்ததாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் சுமத்ரா. தன் கணவர் ஜெய்சங்கரை அல்போன்சா அபகரித்துக் கொண்டதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். .
இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த புகாரில் தான் கைதாகலாம் என கருதி அல்போன்சா முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
அல்போன்சாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Post a Comment