மொழி, அபியும் நானும், பயணம், கவுரவம் போன்ற கவனிக்கத்தக்க படங்கள் தந்த ராதாமோகன் அடுத்து இயக்கும் படம் உப்பு கருவாடு.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ், நைட் ஷோ சினிமா நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப் படத்தில், கருணாகரன், நந்திதா ஆகியோர் நடித்துள்ளார்கள். முழுமையான பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள இப்படம் சினிமா வட்டாரத்தில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக அமைந்துள்ளது.
படம் குறித்து தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் கூறுகையில், "தேர்ந்த பல படங்களை தந்து வரும் இயக்குனர் ராதா மோகன், மீண்டும் ஒரு அழகிய படத்தை எடுத்துள்ளார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரது திறமையான உழைப்பு படத்தை குறித்த காலத்தில் முடிக்க உதவியுள்ளனர்.
‘உப்பு கருவாடு' குழுவினருக்கு எனது நன்றிகள். படத்தின் இறுதிகட்ட வேலைகள் மிக வேகமாய் நடந்து வருகின்றன. விரைவில் ரசிகர்கள் சுவைக்க தயாரிகிறது ‘உப்பு கருவாடு', என்றார்.
Post a Comment