ரஜினிக்கும் மோகன் பாபுவுக்கும் உள்ள நெருக்கமான நட்பு நாடறிந்தது. இருவர் வீட்டிலும் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் குடும்பத்துடன் நேரில் கலந்து கொண்டு பரஸ்பரம் வாழ்த்துவார்கள்.
தெலுங்கு பட உலகம் கடந்த மூன்று நாட்களாகவே திருவிழா கோலம் பூண்டிருக்கிறது. காரணம், மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் திருமணம் நடைபெறுவது தான்.
மஞ்சு மனோஜ் - பிரணதி
மஞ்சு மனோஜ்- பிரணதி திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் இன்று நடக்கிறது. ஆனால், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாகவே திருமண நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கின.
சங்கீத்
திருமணத்திற்கு முன்னதாக கடந்த 17-ந் தேதி நடைபெற்ற சங்கீத் எனப்படும் நிகழ்ச்சியில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இதில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விக்ரம் பிரபு, ஆர்யா, மற்றும் நடிகைகள் த்ரிஷா, ஹன்சிகா, ஸ்ரேயா ரெட்டி மற்றும் தெலுங்கு நடிகர்களான பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, ராணா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
ரஜினி
இந்நிலையில், இன்று மஞ்சு மனோஜ் - பிரணதி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார் ரஜினி. அங்கு நடைபெறும் மஞ்சு மனோஜ் திருமணத்தில் கலந்துகொள்கிறார்.
இதற்கு முன்
இதற்கு முன்பு மோகன் பாபு வீட்டுத் திருமணத்தில் பங்கேற்ற ரஜினி, திருமண வேலைகளை கூட இருந்து செய்தார். அவருடன் ரஜினி குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
Post a Comment