நந்தா பெரியசாமி இயக்கத்தில், விஜய் வசந்த் நடித்து வரும் ஜிகினா படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வாங்கியுள்ளது.
தரமான படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே என்றுமே வரவேற்புண்டு. இதில் சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் என பாகுபாடில்லை. வழக்கு எண் 18/9, கோலி சோடா, மஞ்சப்பை , சதுரங்க வேட்டை என தரமான படங்களை வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ், மீண்டும் ஒரு தரமான படத்தை வெளியிட தயாராக உள்ளனர்.
இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி இயக்கத்தில் விஜய் வசந்த், சானியா தாரா நடித்துள்ள ஜிகினா படத்தை திருப்பதி பிரதர்ஸ் வெளியிட உள்ளனர்.
"படத்தை துவக்கும் முன்பே ரவி நந்தா பெரியசாமியின் கதையின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. படத்தைப் பார்த்தவுடன் அந்த நம்பிக்கை மேலும் வலுவடைதுள்ளது. இப்படம் ரவிநந்தா பெரியசாமிக்கு மட்டுமல்ல திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு மேலும் நற்பெயரை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது..," என்கிறார் இயக்குநர் லிங்குசாமி.
Post a Comment