சல்மானுக்கு தண்டனை... மவுனம் சாதிக்கும் கான்கள்!

|

பாலிவுட்டின் முதல் நிலை நடிகர்களுள் ஒருவரான சல்மான் கானுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடைத்திருக்கிறது. ஆனால் அது குறித்து மற்ற முன்னணி கான் நடிகர்கள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் கார் ஓட்டி, ஒருவரைக் கொன்ற வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் சிறை தண்டனைப் பெற்றுள்ளார் சல்மான். அவருக்கு ஜாமீன் தொடருமா, ரத்தாகுமா என்பது இன்று தெரிந்துவிடும்.

ரத்தானால் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அவர் அடைக்கப்படுவார்.

Why the other 'Khans' keep mum in Salman Khan conviction

சல்மான் கானுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சோனாக்‌ஷி சின்கா, பிரீத்தி ஜிந்தா, பிபாஷா பாசு, நடிகர்கள் சதிஷ் கவுசிக், ரிஷி கபூர், அர்ஜுன் கபூர், இயக்குநர் கரண் ஜோஹர் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் சல்மான் கானுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த பாலிவுட்டைய அதிரவைத்துள்ளது இந்தத் தீர்ப்பு.

எனினும் சல்மான்கானின் மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் போட்டியாளர்களான பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் ஷாரூக்கான் மற்றும் அமீர் கான் ஆகிய இருவரும் இதுவரை நீதிமன்ற தீர்ப்பு பற்றி எவ்வித கருத்துகளையும் தெரிவிக்காமல் உள்ளனர்.

 

Post a Comment