இந்தி "ஜிகர்தண்டா" தயாரிப்பாளர்- இயக்குனர் இடையே திடீர் மோதல்!

|

சென்னை: 2014ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ஜிகர்தண்டா படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவிருந்த நிலையில் தற்போது சிலபல பஞ்சாயத்துக்கள் படத்தின் இயக்குனருக்கும் தயாரிப்பளருக்கும் இடையே எழுந்துள்ளது.

ஜிகர்தண்டா படம் தயாரித்த போதே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கும்இடையே முட்டலும் மோதலுமாக இருந்தது படத்திற்கு யூ சர்டிபிகேட் வேண்டுமென்றால் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று சென்சாரில் சொன்னபோது அறவே முடியாது என்று மறுத்து விட்டார் கார்த்திக்.

jigarthanda

யூ சர்டிபிகேட் கிடைக்காததால் வரிவிலக்கில் கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் லாபம் போய்விட்ட வருத்தத்தில் இருந்த தயாரிப்பாளர் கதிரேசன் தற்போது அதற்கு பழிவாங்கி விட்டார்.

ஹிந்தி பட ரீமேக் உரிமையை கார்த்திக் சுப்புராஜிற்கு தெரியாமல் சில கோடி ரூபாய்க்கு விற்று விட்டார். இதைத் தெரிந்து கொண்ட கார்த்திக் அதில் 40% ராயல்டி கேட்க, தர முடியாது என்று தகராறு செய்கிறாராம் தயாரிப்பாளர்.

படத்தின் கதை கார்த்தியுடையது எனவே அவருக்கு தெரியாமல் படத்தை விற்க முடியாது, விற்றாலும் அவருக்கு உள்ள ராயல்டியானது கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக இயக்குனர்கள் சங்கத்தில் புகார் செய்திருக்கிறாராம் கார்த்திக் விரைவில் இது தொடர்பாக பஞ்சாயத்து நடக்கலாம் என்று கோலிவுட்டில் சொல்கின்றனர்.

 

Post a Comment